அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் யூசுப் பதான்!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான், இதுவரை 57 ஒருநாள், 22 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 38 வயதாகும் அவர், 2008 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். ஒருநாள் தொடரில் 2 சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசினார். ஒருநாள் போட்டிகளில் 33 விக்கெட்டுகளும் டி20 தொடரில் 13 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

சர்வதேச தொடர்களை தவிர, ஐபிஎல் தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தீராத இடம் பிடித்தார். ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர் என்று அழைக்கப்படும் யூசுப் பதான், 2010 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியில் இருந்தார். அப்பொழுது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அதிவேகமாக சதம் அடித்தோர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் 174 போட்டிகள் ஆடிய இவர், 3204 ரன்கள் மாற்றும் 42 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் யூசுப் பதான், அனைத்து வகையான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரை நான் தோளில் தூக்கிச் சுமந்து, மறக்க முடியாத தருணமென குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்