முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தனது முதல் ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே பெற்றார்.

Matthew Breetzke

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி இன்று காலை 10 மணி அளவில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், நியூசிலாந்திற்கு எதிரான 2வது போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட் இழப்புக்கு 304  ரன்களை குவித்து 305 இலக்கை நிர்ணயித்தனர். இதில், மேத்யூ பிரீட்ஸ்கே தனது முதல் ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் எடுத்த ஒரே வீரராகவும், தனது முதல் போட்டியில் சதம் அடித்த நான்காவது தென்னாப்பிரிக்க வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

ப்ரீட்ஸ்கே தனது முதல் ஒருநாள் சதத்தை அறிமுகத்திலேயே அடித்தது மட்டுமல்லாமல், அதை 148 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து ஒரு அதிரடி சதமாகவும் மாற்றினார். ப்ரீட்ஸ்கே 148 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசிய ப்ரீட்ஸ்கே இறுதியாக ஆட்டமிழந்தார்.

இதற்கு முன், கடந்த 1978 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 148 ரன்கள் குவித்த மேற்கிந்தியத் தீவுகளின் அணி விரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் வைத்திருந்த 47 ஆண்டுகால சாதனையை 26 வயதான மேத்யூ பிரீட்ஸ்கே முறியடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்