உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இந்திய அணி கலந்துகொண்ட உலக கோப்பை 2023 முதல் போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி களமிறங்கியது.
இதில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டமிழக்க செய்திருந்தது. 50 ஓவரில் 200 ரன்கள் எனும் இலக்கை எட்டி பிடிக்க களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணி வீரர்கள் ரன் எடுக்கும் முன்னரே 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
2 ரன்களுக்கு ( எக்ஸ்ட்ரா) 3 விக்கெட் என்ற நிலையில் 3வது களமிறங்கிய விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போல கே.எல்.ராகுலும் பொறுப்புடன் அவருக்கு துணையாக நிதானமாக ஆடினார். விராட் கோலி 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 97 ரன்கள் எடுத்து அணியை வெற்றியடைய செய்தார்.
விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இளம் வீரர்கள் விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நீங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்கள் வீழ்ந்த பிறகு களமிறங்குவதை கற்பனை செய்து பாருங்கள்.
நீங்கள் கிரீஸுக்கு வெளியே சென்று ஒரு பெரிய ஷாட் அடிக்க முடியாது. நீங்கள் ஆட்டத்தின் அழுத்தத்தை உள்வாங்கி அந்த சூழ்நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும். இதனை இளம் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் அவர் மிகசிறந்த கிரிக்கெட் வீரராக உள்ளார். டிரஸ்ஸிங் அறையில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலர் உடற்தகுதியின் முக்கியத்துவத்தை கோலியை பார்த்து கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
விக்கெட்டுக்கு இடையில் ஓடி ஓடி ரன்கள் சேர்ப்பதன் முக்கியத்துவமும், ஆட்டத்தின் நடுவில் எப்படி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது என்பதும் முக்கியம். ஏனென்றால் டி20 கிரிக்கெட் ஆட்டம் அதிகம் விளையாடுவதால், புதிய வீரர்கள் நிறைய பேர் பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்கவே விரும்புகிறார்கள் என்றும் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…