ஒருவருடன் ஒருவர் மோதல் ..! இளம் வங்கதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி !
SLvsBAN : இலங்கை அணி வங்கதேச அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 3 ஒடிஐ போட்டி நடைபெற்றது. இந்த 3 ஒடிஐ போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தது. இந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் இருவருக்கு காயங்கள் ஏற்பட்டது.
Read More : – IPL 2024 : சி.எஸ்.கே-ஆர்.சி.பி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது ! டிக்கெட் விலை எவ்ளோனு தெரியுமா ?
வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மானனுக்கு காலில் தசைபிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வங்கதேச அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானான ஜாக்கர் அலிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர் வங்கதேச அணிக்காக இதுவரை ஒரு சர்வேதச போட்டிகளில் கூட விளையாடியது இல்லை. வங்காளதேச U-19 அணிக்காக மட்டும் விளையாடி இருக்கிறார். இவர் இந்த போட்டியில் மாற்று வீரராக பீல்டிங் செய்ய களமிறங்கினார்.
அப்போது, தஸ்கின் அஹமத் பந்துவீச்சில் இலங்கை வீரர் பிரமோத் மதுஷனின் கேட்சை பிடிக்க முயன்றபோது அனமுல் ஹக் மற்றும் ஜாக்கர் அலி இருவரும் மோதிக்கொண்டனர். இதனால் மோதிய அதிர்ச்சியில் ஜாக்கர் அலிக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காயம் ஏற்பட்ட ஜாக்கர் அலியை ‘ஸ்ட்ரெட்ச்சரில்’ படுக்க வைத்து கொண்டு சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். இன்றைய போட்டியில் மட்டும் 3 வங்காளதேச வீரர்கள் காயத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
Read More :- TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !
ஜாக்கர் அலி, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகிய 3 வீரர்களும் காயம் காரணமாக வெளியேறி உள்ளனர். சௌமியா சர்க்கார் ஆட்டத்தின் போது பவுண்டரியில் பந்தை நிறுத்தும் போது விளம்பரப் பலகையில் மோதியதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் போட்டியின் பாதியில் சென்றார். இதற்கு ஆறுதலாக வங்கதேச அணி இந்த போட்டியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றி உள்ளது.