இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹெலிகாப்டர் நிச்சியமாக பார்ப்பீர்கள் என்று ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன் .
மேலும் அவர் கூறியது ரசிகர்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தியது.இதனால் மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் உள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, அனைவரும் தோனியின் ஆட்டத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர் அதில் நானும் ஒருவன், மேலும் கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிக்காக பயிற்சியில் நங்கள் ஒன்றாக இருந்தோம் அப்பொழுது அவர் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும் கண்டிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹெலிகாப்டர் நிச்சியமாக பார்ப்பீர்கள்.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கண்டிப்பாக தோனி சிறப்பாக விளையாடுவார், ஏனெனில் அவரது ரசிகர்களை உற்சாகப்படுவதற்காக தோனி ஆவலுடன் இருக்கிறார், என்றும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…