இந்த தொடரில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் – யுஸ்வேந்திர சாஹல்..!

Published by
பால முருகன்

இலங்கைக்கு எதிரான போட்டியில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் என யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாத காரணத்தால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர்.

இதில் ஒரு நாள் போட்டி வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 18- ஆம் தேதி முடிகிறது.  டி 20 போட்டி ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த போது, கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. இந்தத் தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவேன். நான் பந்துவீச்சு பயிற்சியாளருடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன் அவர்கள் தொடர்ந்து எனக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள் அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். இப்போது எனது முக்கிய கவனம் இந்த தொடர் மட்டும் தான்.

நான் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள் தொடரில் விளையாடுகிறேன், ஆனால் நாங்கள் ஏற்கனவே இங்கு விளையாடியுள்ளோம். இந்தத் தொடரில் நீங்கள் அதிக நம்பிக்கையுள்ள யூஸியைக் காண்பீர்கள். நான்  மேலும் புதிதாக பந்து வீச முயற்சிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

21 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

29 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

50 minutes ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago

காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!

காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…

2 hours ago