கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும் ! ஆர்சிபியை விமர்சித்த க்ரிஷ் ஸ்ரீகாந்த்!!

Krish Srikkanth

க்ரிஷ் ஸ்ரீகாந்த் : ஆர்சிபி அணி, ராஜஸ்தான் அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை விமர்சித்து பேசி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 19-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்த போது பெங்களூரு அணி, சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் வீழ்த்தியிருந்தார்கள். அதன் பிறகு எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வி பெற்று பிளே-ஆஃப் சுற்றிலிருந்தும் வெளியேறினார்கள்.

சென்னை அணியை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த வெற்றியின் கொண்டாட்டத்தை பெங்களூரு அணியும், பெங்களூரு அணியின் ரசிகர்களும் ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு நிகராக கொண்டாடினார்கள். இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் ஒரு சிலர் அதை விமர்சித்து பேசி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரது யூடியூப் சேனலில் அவரது மகனான அனிருதா ஸ்ரீகாந்துடன் கிரிக்கெட் பற்றி விவாதித்த வீடியோவில் பெங்களூரு அணியை விமர்சித்து சில விஷயங்களை கூறி இருந்தார்.

அவர் கூறுகையில், “வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்கும் போது உங்கள் வாயை மூடிக்கொண்டு வெற்றியை தொடருங்கள், நீங்கள் செய்யும் ஒரு செயலில் இருந்து சத்தம் எழுப்பினால் உங்களால் அந்த வேலையை செய்து முடிக்க முடியாது. அதனால் கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு தான் விளையாட வேண்டும்.

நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால் வாழ்த்துக்கள், அதே நேரத்தில் நீங்கள் மோசமாக விளையாடியிருந்தால் அந்த விமர்சனத்தையும் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் ஒருபோதும் வாயைத் திறந்து ஆக்ரோஷத்தைக் காட்டக்கூடாது. சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தலா 5 பட்டங்களை வென்றுள்ளனர். ஆனால் இவர்கள் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது போல கருதினார்கள் ஆனால் தகுதி பெற்றவுடன் நாக் அவுட் ஆனார்கள்”, என்று அவர் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்