இப்படி பண்ணிடீங்களே பாஸ்! ரோஹித் சர்மா செஞ்ச தவறு..வெளுத்து வாங்கிய டிராவிஸ் ஹெட்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் முக்கியமான வாய்ப்பை தவறவிட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா என்றாலே ரொம்ப பிடிக்கும் என்கிற அளவுக்கு ஆஸ்ரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வருகிறார். ஏனென்றால், முதல் போட்டியில் 101 பந்துகளில் 89 ரன்கள், 2-வது போட்டியில் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். அந்த அதிரடியான ஆட்டம் 3-வது போட்டியிலும் தொடர்ந்துள்ளது.
மூன்றாவது போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்ரேலியா அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்து கொண்டு இருந்தது. 3 விக்கெட் விழுந்த பிறகு இப்படியே சென்றால் சரியாக இருக்காது என முடிவெடுத்து டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் இணைந்து தரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். ஒரு பக்கம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றோரு பக்கம் ஸ்மித் நிதானமாக விளையாடி கொண்டிருந்தார்.
இருவருமே சதமும் விளாசினார்கள். எனவே, இந்திய வீரர்கள் இருவருடைய விக்கெட்டை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தனர். அந்த சமயத்தில் தேடி வந்த லட்டு என்கிற வகையில் ஒரு கேட்ச் வாய்ப்பு வந்தது. ஆனால், அதனை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பிடிக்காமல் தவறவிட்டார். ஹெட், 125 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த நிலையில், 72வது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டி வீசுவதற்காக வந்தார்.
அந்த பந்து நேரடியாக ரோஹித் ஷர்மாவிடம் சென்றது. அந்த பந்தை மடக்கி பிடிக்க முயற்சி செய்த ரோஹித் சர்மாவால் பிடிக்க முடியவில்லை. இதனால் ஹெட் இன்னும் சிறுது நேரமும் பேட்டிங் செய்தார். ஹெட் 152 ரன்கள் எடுத்தபோது ஜஸ்பிரித் பும்ரா அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும், ஹெட் 112 ரன்கள் எடுத்த போதே அவருடைய விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை ரோஹித் தவறவிட்டது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.