கே.எல்.ராகுல் : டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இந்திய அணியை பற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் ” இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது. நான் இதனை ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாமல் இப்போது ஒரு பார்வையாளராகவும், இந்திய கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவராகவும், இதைச் சொல்வேன்.
இந்திய வீரர்கள் கோப்பையை வெல்வதற்கு கடினமான முயற்சிகளை எடுத்து அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். எப்போதுமே நமக்கு ஒரு இலக்காக இருப்பது என்றால் நம்மளுடைய இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்பது தான். இவ்வளவு காலமும் நம்மால் அதைச் செய்ய முடியாமல் போனது துரதிர்ஷ்டம், சற்று ஒரு பக்கம் வேதனையாக தான் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், நம்மளுடைய அணி அதற்கான முயற்சிகளை என்றும் கைவிட்டது இல்லை.
இந்த சீசனில் கடினமான போட்டிகளில் எல்லாம் வென்று வருகிறார்கள். இது நம்மளுடைய கோப்பையை வெல்லும் இலக்குக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பும்ரா போல ஒரு பந்துவீச்சாளர் நம்மளுடைய அணியில் இருப்பது மிகவும் நல்ல விஷயம். நமது அணியின் வெற்றிக்கு அவர் எந்த அளவுக்கு ஒரு முக்கியமான நபராக இருக்கிறார் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. நாளுக்கு நாள் அவருடைய பந்துவீச்சின் தாக்கம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் கோப்பையை வறவிட்டோம், இது எங்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையாக இருந்தது, ஆனால் அந்த அனுபவத்தில் சிலவற்றையும்,வலிகளையும் சில விஷயங்களை கற்றுக்கொண்டோம் என்று நம்புகிறேன். எனவே, அதெல்லாம் மனதில் வைத்து கொண்டு இந்த சீசன் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பை உடன் வாருங்கள். கண்டிப்பாக கோப்பையை வெல்ல முடியும்” எனவும் கே.எல்.ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் பெயர் அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…