விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான தமிழ்நாடு அணியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி தொடரில் இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை அணிகள் தலா 4 முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்நிலையில், தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் , தினேஷ் கார்த்திக் தற்போது இருவரும் குணமடைந்ததால் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், சையது முஷ்தாக் அலி தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடவில்லை. அதேபோல தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடவில்லை. ஆனால், காயத்தில் இருந்து மீண்ட யார்க்கர் நடராஜன் சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்று இருந்தார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் நடராஜன் சரியாக பந்து வீசவில்லை. இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கேப்டன் விஜய் சங்கர் விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்குக் கேப்டனாக உள்ளார்.
தமிழ்நாடு அணி:
விஜய் சங்கர் (கேப்டன்), ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் சுதர்ஷன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம்.முகமது, ஜே.கௌசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர்.சிலம்பரசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…