பழனி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்திய யார்க்கர் மன்னன் நடராஜன்

பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார் நடராஜன்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் தமிழக வீரரான யார்க்கர் மன்னன் நடராஜன், முக்கிய பங்கு வகித்தார்.
ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் கலந்துகொண்டு, முதல் போட்டியிலே தனது அற்புதமான பந்துவீச்சால் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025