ஐபிஎல் 2024 : டெல்லியில் களமிறங்கும் மஞ்சள் படை ..! குரு – சிஷ்யன் இடையே இன்று பலப்பரீட்சை ..!
![DCvsCSK [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/03/DCvsCSK.webp)
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 2 அபார வெற்றிகளுடன் வரும் சிஎஸ்கே அணியும், 2 தோல்விகளிலிரிருந்து வரும் டெல்லி அணியும் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இந்த போட்டி ஒரு குரு சிஷ்யன் போட்டியாக காணப்படுகிறது. மேலும், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வரும் மஞ்சள் படை தற்போது 3-வது போட்டியிலும் வெற்றி பெரும் முனைப்பில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நேருக்கு நேர்
இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 29 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் சென்னை அணி 19 போட்டிகளிலும், டெல்லி அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. தற்போது, வலு வாய்ந்த சென்னை அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
டெல்லி அணி வீரர்கள் :
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.
சென்னை அணி வீரர்கள் :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025