ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இளம் வீரர்களின் லிஸ்டில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்.!!
ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் மட்டும் அதிரடியாக விளையாடி 477 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முந்தய ஆண்டுகளை விட இந்த சீசன் அவருக்கு நல்ல சீசனாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை விரைவாக அடைந்த இளம் வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 130 நாட்களில் ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு முன்னதாக, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தன்னுடைய 20 வயது 218 நாட்களில் 1,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ப்ரித்திவ் ஷா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Yashasvi Jaiswal becomes the second-fastest Indian to reach 1000 IPL runs.
????IPL/BCCI pic.twitter.com/SRQAh0D7ci
— CricTracker (@Cricketracker) May 7, 2023