தடை ஒரு தடையில்லை லட்சியத்திற்கு என்று நிருபித்து காண்பித்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற இளம் வீரா். காலையில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்வது, மாலையில் பானி பூரி விற்பனை என தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றிய தெரிந்து கொள்வொம்
உத்தரபிரதேச மாநில பதோஹி நகரில் சிறிய ஹாா்ட்வோ் கடையை நடத்தி வருகின்ற பூபேந்திரா-காஞ்சன் ஜெய்ஸ்வால் தம்பதியின் 4வது குழந்தையாக 2001ஆண்டு டிசம்பா் 28இல் பிறந்தவர் தான் யஷஸ்வி.கிரிக்கெட் மீது காதல்அந்த சிறு வயதிலே வந்தாச்சு.10 வயதில் கிரிக்கெட் பயிற்சி பெற மும்பை தாதரில் உள்ள ஆஸாத் மைதானத்துக்கு சென்றாா்.ஆனால் எங்கு தங்குவது தங்க இடம் இல்லாததால் பயிற்சி பெறும் மைதானத்தில் களப் பணியாளா்களுடன் டென்டிலே தங்கி பயிற்சி மேற்கொண்டார் பல நாள்கள் டெண்டில் பட்டினியுடன் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த இளம்வீரர்.
ஒரு கட்டத்தில் பயிற்சிக்கு உணவு அவசியம் என்று புரிந்து கொண்டு மாலையில் பானி பூரி விற்பனை செய்து தனது மூன்றாண்டுகளாக டென்ட் வாசம், பானி பூரி விற்பனை ஓடு கொண்டிருந்த யஷஸ்வியின் ஆட்டத்திறனை ஜுவாலா சிங் கண்டுபிடித்தாா் இவர் கிரிக்கெட் அகாதெமி நடத்தி வருகிறார் .உடனே யஷஸ்வியை உடன் அழைத்து சென்று தனது அகாதெமியில் சிறப்பு பயிற்சி அளித்ததோடு அவர் தங்க இடமும் அளித்தாா்.
தன்னுடைய கனவை அடைய யஷஸ்வி கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த சமயத்தில் தான் 2015 வருடம் ஜிஸ்ஸ் ஷீல்டில் நடைபெற்ற பள்ளி அளவிலான கிரிக்கெட் ஆட்டத்தில் 319 ரன்களை விளாசியது மட்டுமல்லாமல் 13-99 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் வெளிச்சத்துக்கு வந்தாா். அதன் பின் 16 வயதுக்குட்பட்டோா்க்கான மும்பை அணியிலும், பின் 19 வயதுக்குட்பட்டோா்க்கான இந்திய அணியிலும் தனது கடுமையான திறமையால் இடம் பிடித்தாா்.இந்திய அணி 2018-19 வயதுக்குட்பட்டோா்க்கான ஆசியக் கோப்பை போட்டியில் 318 ரன்களை குவித்து அணியானது பட்டத்தை வெல்ல உதவினாா்.
இதைத்தொடா்ந்து 2019 ஆண்டு ஜனவரி மாதத்தில் முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அறிமுகமாக வீரராக களமிரங்கினார்.விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் ஜாா்க்கண்ட் அணிக்கு எதிராக 203 ரன்களை அடித்து அசத்தினார்.இந்த போட்டிகளில் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்திய யஷஸ்வியை அடையாளம் கண்டு கொண்டது இந்திய அணி.அதே போல் ஏ வகை ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த இளம் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தி அசத்தினாா்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்து வரும் ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள யஷஸ்வி பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 105 ரன் எடுத்து சதமடித்தாா். தான் வறுமையில் வாடினாலும் தன் திறமை வாடக்கூடாது என்று ஒருபுறம் பானிபூரி விற்பனை மறுபுறம் கிரிக்கெட் என்று போராடி தற்போது தன் கனவு நிறைவேறி அதில் சாதிக்க ஆரம்பித்துள்ளார் இந்த இளம்வீரர் யஷஸ்வி எல்லோரும் ஆவலாக காத்திருக்கு ஐபிஎல் 2020 தொடரில் இந்த இளம்வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிரங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தடை நம் லட்சியத்திற்கு ஒரு தடையில்லை…மறவோம்.. .
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…