எம்.எஸ்.தோனியின் கையெழுத்திட்ட பேட்டுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!
எம்.எஸ் தோனியால் கையொப்பமிடப்பட்ட பேட் உடன் யஷஸ்வி போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 189 ரன்களை எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 60 பந்துகளில் 101* ரன்கள் எடுத்தார். 190 ரன்கள் என்ற இலக்குடன் களமிங்கிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இந்நிலையில், ராஜஸ்தான் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போட்டியின் பின்னர் சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனியால் கையொப்பமிடப்பட்ட பேட் உடன் யஷஸ்வி போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், போட்டியின் பின்னர் எனது பேட்டில் எம்.எஸ் தோனி தனது கையெழுத்தை எழுதியது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.