WTC Final TEA Break : இந்தியா திணறல் பேட்டிங்… 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!
இந்திய அணி தேநீர் இடைவேளை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது, அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்கள், ஸ்மித் 121 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியாக ரோஹித் (15 ரன்கள்) மற்றும் கில் (13 ரன்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். தற்போது வரை தேநீர் இடைவேளை முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. புஜாரா 3* ரன்கள் மற்றும் கோலி 4* ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்தியா இன்னும் 432 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.