Minor injury to Rohit Sharma [Image Source : Reuters Photo/ICC]
இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் சிறிய காயம் என தகவல்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. நாளை முதல் 11 வரை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் சிறிய காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு முன்னதாக, லண்டனில் நெட் செஷனில் பேட்டிங் செய்யும் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கட்டை விரலில் டேப்பைப் பயன்படுத்துவதையும், டேப் செய்யப்பட்ட கட்டை விரலுடன் வலைப்பயிற்சியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக ரோஹித் சர்மா வலைப்பயிற்சியை தொடரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் உட்பட பல முக்கிய வீரர்கள் பயிற்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ரோஹித் சர்மா, கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள நிலையில், இந்திய அணி கேபட்டனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது கவலையை அளிக்கிறது. இருப்பினும், பெரியளவு காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…