WTC Final: ரஹானே அரைசதம்… போராடும் இந்திய அணி! உணவு இடைவேளை வரை 260/6 ரன்கள் குவிப்பு.!

rahane 50

இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளை முடிவில் ரஹானே மற்றும் தாக்குர் உதவியுடன் 260/6 ரன்கள் எடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.

ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் சேர்ந்து அணிக்கு 50 ரன்களை எடுத்து கொடுத்தனர், ஜடேஜா 48 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷர்துல் மற்றும் ரஹானே இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடி வருகின்றனர். நிதானமாக விளையாடி ரஹானே தனது அரைசதம் கடந்தார்.

ரஹானே 89* ரன்களும், ஷர்துல் 36* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை இந்தியா 6 க்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்