WTC Final: டாஸ் வென்றது இந்தியா… ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்.!

Published by
Muthu Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் டாஸ் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பவுலிங் தேர்வு.

டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவலில் மோதுகின்றன. இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. போட்டியில் விளையாடும் நேரம் பாதிக்கப்பட்டால் அதை ஈடு செய்வதற்கு ஐசிசி கூடுதலாக ஜூன் 12 ஆம் தேதி ரிசர்வ் டே வாக அறிவித்துள்ளது.

2021-23க்கான இரண்டு வருட டெஸ்ட் போட்டி தொடர்களின் முடிவில் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரமாக களமிறங்குகின்றன. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம வலிமையுள்ள இரு அணிகளும், கடைசியாக இந்தியாவில் மோதிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என வென்றிருந்தது.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் டாஸ், இரு அணிகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தை பொறுத்தவரை போட்டி நடைபெறும் 5 நாட்களும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் போட்டிக்கான 5 நாட்களுக்குள் முடிவு கிடைத்துவிடும் என்று தகவல் தெரிவிக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(C), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத்(W), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(W), பாட் கம்மின்ஸ்(C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்

Published by
Muthu Kumar

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

18 minutes ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

36 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

51 minutes ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

1 hour ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

2 hours ago