உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 151/5 ரன்கள் குவிப்பு.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்மித் 121 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியாக கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களும் அவரை தொடர்ந்து கில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (14 ரன்கள்) மற்றும் புஜாரா (14 ரன்கள்) எடுத்தநிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு, இதை எடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பொறுப்புடன் விளையாடி வந்த ஜடேஜா 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ரஹானே 29* ரன்கள் மற்றும் பரத் 5* ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி 318 ரன்கள் பின்னிலையில் விளையாடுகிறது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…