உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி..,15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்தியா அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. 20 வீரர்களுடன் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து சென்ற 20 இந்திய வீரர்களில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், மாயங்க் மற்றும் ராகுல் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 11.71 கோடி பரிசுத்தொகை எனவும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 5.8 கோடி பரிசுத்தொகை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் 15 பேரின் பெயர் பட்டியலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
????️ #TeamIndia announce their 15-member squad for the #WTC21 Final ???? ???? pic.twitter.com/ts9fK3j89t
— BCCI (@BCCI) June 15, 2021
9 அணிகள் விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன்18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.