#WT20WC2023: பங்களாதேஷை வென்று வெற்றி வாகை சூடியது ஆஸ்திரேலிய மகளிர் அணி..!
ஆஸ்திரேலியா மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகின்ற பிரிவு-எ (Group A) க்கான 8-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை முறியடிக்க ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர். இவர்கள் இருவரது கூட்டணியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் எடுத்தது. வங்க தேச வீராங்கனைகளின் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
இவர்களையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் மெக் லானிங் (48* ரன்கள்) மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (19*) இருவரும் ஆட்டமிழக்காமல் ரன்களை குவித்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 111 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது.