ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இன்று வெல்லும் அணி நேராக வரும் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் அடித்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மல், ஸ்மிருதி மந்தனா இருவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 52 ரன்கள் எடுத்து அணியை வலுவாக்கினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ஆட்டமிழந்ததும் இந்திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக ஷிகா பாண்டே களத்தில் இருந்தும் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஆஷ்லே கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…