#INDWVSAUSW: அதிர்ச்சி..இறுதிவரை போராடி இந்திய மகளிர் அணி தோல்வி..!

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 

மகளிர் டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இன்று வெல்லும் அணி நேராக வரும் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

INDWvsAUSW 2

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் அடித்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மல், ஸ்மிருதி மந்தனா இருவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 52 ரன்கள் எடுத்து அணியை வலுவாக்கினார்.

INDWvsAUSW 12

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ஆட்டமிழந்ததும் இந்திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக ஷிகா பாண்டே களத்தில் இருந்தும் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த  போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஆஷ்லே கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்