ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக, ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில், நேற்று குரூப்-A இல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் மோதின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க நிலை வீராங்கனைகளை தவிர பின்வரிசையில் இறங்கியவர்கள் யாரும் நிலைத்து நின்று ஸ்கோர் எடுக்கவில்லை.
இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது, இலங்கை அணியில் அதிகபட்சமாக மாதவி (34 ரன்கள்), கேப்டன் அத்தப்பட்டு (16 ரன்கள்) மற்றும் விஷ்மி குணரத்னே (24 ரன்கள்) குவித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 113 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி (54* ரன்கள்) மற்றும் பெத் மூனி (56* ரன்கள்) எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும், இலங்கை அணி மூன்றில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…