ஐபிஎல் 2024 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் செய்த தவறை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் நன்றாக தான் விளையாடி வந்தது.
முதலில் வார்னர் தனது விக்கெட்டை இழந்த பிறகு ப்ரித்திவ்ஷா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் விக்கெட் விழுந்த பிறகு நம்பர் 3 இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அபிஷேக் போரல் வந்தார். இவ்வளவு பெரிய டார்கெட்டை துரத்தும் போது நம்பர் 3-யில் இறங்கி எதற்காக அவர் விளையாடவில்லை என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்தது.
அபிஷேக் போரல் அவுட்டான பிறகு தான் ரிஷப் பண்ட் உள்ளே வந்து விளையாடினார் ஆனால், அவரால் சரியாக ரன்களையும் அடிக்க முடியவில்லை. 1 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். டெல்லி அணியும் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட் இறங்கிய இடம் தவறு என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” நீங்கள் 234 என்ற பெரிய இலக்கை துரத்தும் போது சற்று யோசித்து விளையாடவேண்டும். இங்கே எனக்கு ஒரு கேள்வி உள்ளது. ப்ரித்வி ஷா நன்றாக விளையாடினார். டேவிட் வார்னர் அவுட்டானார் – எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அவர்களுடைய ரன்கள் ஓப்பனிங்கில் கிடைத்துவிட்டது. அதன் பிறகு நம்பர் 3 இடத்தில் அபிஷேக் போரல் எதற்காக இறக்கிவிட்டீர்கள்? அவருடைய பேட்டிங்கை நான் குறை சொல்லமாட்டேன்.
ஆனால், இந்த மாதிரி ஒரு நேரத்தில் ரிஷப் பண்ட் இறங்கி வந்து விளையாடி இருக்கவேண்டும். ரிஷப் பண்ட் இடம் நம்பர் 3 தான். அந்த இடத்தில் இறங்காமல் தாமதமாக இறங்கி விளையாடினாள் எப்படி சரியாக இருக்கும். இது என்னை பொருத்தவரை தவறான விஷயம் என்று தான் சொல்வேன்.ரிஷப் பண்ட் வந்திருக்க வேண்டும். அவர் எந்த காரணத்துக்காக வரவில்லை என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை .
அபிஷேக் போரல் தன்னால் முடிந்ததைச் செய்தார். அவர் 150 ஸ்டிரைக் ரேட் செய்து கொண்டு விளையாடினார். ஆனால், அதற்கு முன்னாடியே ரிஷப் பண்ட் இறங்கி விளையாடி இருந்தால் இன்னும் நன்றாக ரன்கள் சேர்ந்து இருக்கும். என்னை பொறுத்தவரை அடுத்த போட்டியில் அவர் நம்பர் 3-யில் இறங்கி தான் விளையாட வேண்டும்” எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…