எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ், ஆர்.சி.பி ஆகிய அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் என முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்மைதானத்தில் மோதுகிறது. ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த சூழலில் நாளை தொடங்கப்படவுள்ள காரணத்தால் மகிழ்ச்சியுடன் போட்டியை பார்க்க காத்திருக்கிறார்கள்.
இன்னும் போட்டிகள் கூட தொடங்கவில்லை..அதற்குள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்…இந்த அணி தான் கோப்பையை வெல்லும் என தன்னுடைய கணிப்புகளை கணிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி தான் பெங்களூர் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் என பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று நான் நினைக்கிறேன். அதைப்போல, ஆர்சிபி அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன்.ஆர்.சி.பி அணியை எதற்காக சொல்கிறேன் என்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. எனவே, சிறப்பாக விளையாடி பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் என நினைக்கிறேன்.
குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் எனவும் நான் கணித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் எனது நான்கு அணிகள் இவைதான். நீங்கள் என்னிடம் கேட்கலாம் சென்னை அணியை நீங்கள் ஏன் தேர்வு செய்யவில்லை என்று..சென்னை அணி வலுவான அணிதான் ஆனால், இந்த முறை பிளேஆஃப் போகாது என நினைக்கிறேன்.
நான் சென்னையை தேர்வு செய்யாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கலாம். ஆனால், நான் என்னுடைய கருத்தை சொல்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அந்த 4 அணிகள் செல்லலாம் என்பது தான் என்னுடைய கருத்து ” எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சென்னை அணி போகிறது என்று எதற்காக இப்படி சொல்கிறீர்கள்? என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.