WPL2023: மகளிர் பிரீமியர் லீக் தொடரின், போட்டி அட்டவணை அறிவிப்பு.!
மார்ச் 4 இல் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்ட்டுள்ளது.
மகளிருக்கான ஐபிஎல் தொடரான மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) இந்த ஆண்டு வரும் மார்ச் 4இல் தொடங்கப்பட இருக்கிறது. பிசிசிஐ மகளிருக்கான ஐபிஎல் தொடரையும் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) தொடரின் முழு போட்டி அட்டவணையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதன்படி போட்டிகள் மார்ச்-4 இல் தொடங்கி மார்ச் 26இல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 20 போட்டிகள் மற்றும் இரண்டு பிளேஆஃப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 4இல் மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் களம் காணுகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 26 ஆம் தேதி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
4 நாட்கள் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் இரவு 7:30 மணிக்கும், இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3:30 மணிக்கும் தொடங்குகின்றன. இந்த அறிமுக மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) கோப்பைக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், UP வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய ஐந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
The wait is over! The inaugural Women’s Premier League Schedule is out.
Gujarat Giants will take on Mumbai Indians in the season opener on 4th March at the DY Patil stadium.#WPL #WPL2023 #CricketNews #RCB #MI #GG #UP #DC pic.twitter.com/BiYom93Yn1
— CricTracker (@Cricketracker) February 14, 2023