WPL2023: பிளே ஆஃபுக்கு எந்தெந்த அணிகள் தகுதி.!
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் பிளே ஆஃபுக்கு டெல்லி, மும்பை மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 5 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில் வெற்றிகள் மற்றும் புள்ளிகளுடன் அடிப்படையில் முதல் 3 இடங்களைப்பிடித்த அணிகள் தற்போது அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
டெல்லி கேபிட்டல்ஸ் (10 புள்ளிகள்), மற்றும் மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளிகள்) பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி யுபி வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இந்த அறிமுக WPL தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியாக எலிமினேட்டர் போட்டி வரும் மார்ச் 24யிலும் இறுதிப்போட்டி மார்ச் 26யிலும் நடைபெறுகிறது.