மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத்-பெங்களுரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
மகளிர் ஐபிஎல் தொடர் என்றழைக்கப்படும் அறிமுக மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மகளிர் தினத்தன்று மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது.
குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், டங்க்லே(65 ரன்கள்) மற்றும் ஹர்லீன் தியோல்(67 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் ஷ்ரேயங்கா பட்டீல் மற்றும் நைட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் ஸ்ம்ரிதி மந்தனா(18 ரன்கள்), சோபி டெவின்(66 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பிறகு களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 32 ரன்களில் ஆட்டமிழக்க ஹீதர் நைட் இறுதி வரை வெற்றிக்கு போராடி 30* ரன்கள் அடித்தார், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் பெங்களூரு அணி 12 ரன்கள் அடித்து போராடி தோற்றது.
இதனால் பெங்களூரு அணி 190/6 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் அடிக்க முடிந்தது, குஜராத் அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, குஜராத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்ட நாயகியாக டங்க்லே தேர்வு செய்யப்பட்டார். பெங்களூரு அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் இன்னும் முதல் வெற்றியை எட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…