பெண்களுக்கான WPL 2024 தொடரின் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்று மும்பை பெண்கள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குஜராத் அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால், அந்த அணி ரன்களை எடுக்க மிகவும் சிரமித்திற்குள்ளானது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 127 என்ற எளிய இலக்கை அடைய பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை அணி.
தொடக்கத்தில் விளையாடிய மும்பை அணியின் வீரர்கள் ரன்களை எடுக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் 49-3 என்ற கணக்கில் மும்பை அணி தடுமாறியது. ஆனால், அதன் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமெலியா கெர் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து நிதானத்துடன் விளையாடினார்கள்.
இதனால் மும்பை அணி சரிவிலிருந்து மீண்டு 18.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 என்ற இலக்கை அடைந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி WPL 2024 தொடரின் 2-வது வெற்றியை பெற்றது. WPL-ல் தொடரில் ஒட்டுமொத்தமாக மூன்று முறை இவ்விரு அணிகளும் மோதியதில் மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் (M.O.M) – அமெலியா கெர் (மும்பை இந்தியன்ஸ்).
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…