மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன்

WPL: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற 2வது மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது.

Read More – IPL 2024: சென்னை – பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டெல்லி அணியின் வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிகபட்சமாக 44 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் மிக குறைந்த ரன்களே எடுத்தனர்.

இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்களும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.

Read More – மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி மந்தனா!

அந்த அணியின் தொடக்க வீராங்கனை சோஃபி டெவின் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடங்க வீராங்கனையான கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். முடிவில் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்தாண்டு நடைபெற்ற முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்தாண்டு நடைபெற்ற இரண்டாவது தொடரை பெங்களூர் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்