WPL 2024 : ஸ்மிருதியின் போராட்டம் வீண் ..! பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி ..!
WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 7-வது போட்டியாக பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரரான லேனிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.
ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை ஃபோரும், சிக்ஸுமாக விளாசினார்.
இருவரும் தங்களது கூட்டணியில் 82 ரன்கள் சேர்த்தனர். துரதிஷ்டவசமாக சபாரி ஷர்மா 50 ரன்கள் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்ஸியும் ஆட்டமிருந்து வெளியேறினார். அதன் பின் மரிசான் கேப் களமிறங்கி 16 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்.
Read More :- INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது BCCI ..! இதுதான் மாற்றமா..?
அவரைத் தொடர்ந்து ஜோனாசெனும் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரின் அதிரடி கேமியோவால் டெல்லி அணியின் ஸ்கோர் 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்திருந்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவைன் மற்றும் நாடின் டி கிளர்க் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இதை தொடர்ந்து, 193 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கியது பெங்களூரு அணி. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணியின் கேப்டனான ஸ்மிருதி மந்தனா பெங்களூரு மைதானத்தில்உள்ள ரசிகர்களுக்கு சிக்ஸர்கள் மூலம் வானவேடிக்கை காட்டினார். அவர் வெறும் 43 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக மரிசேன் காப் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
Read More :- என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்.. – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா.
அவரை பின்தொடர்ந்து களமிறங்கிய எந்த ஒரு வீரரும் சரிவர விளையாடாமல் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் WPL 2024 தொடரின் 2-வது வெற்றியைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஆட்ட நாயகன் (M.O.M) – மரிசேன் காப் (டெல்லி கேபிட்டல்ஸ்)