#WPL 2024 : 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி ..!
பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய யூபி வாரியர்ஸ் அணியில் யாரும் பொறுப்புடனும், பொறுமையுடனும் விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
Read More :- இந்த முடிவு எளிதானது அல்ல ..! கண்கலங்கி ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் ..!
மேலும், டெல்லி அணியின் பந்து வீச்சாளரான மரிசான் கேப் மிகச்சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி வெறும் 5 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இறுதியில் யூபி அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. யூபி அணியில் அதிகபட்சமாக ஸ்வேதா செஹ்ராவத் 42 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
அதை தொடர்ந்து, எளிய இலக்கை அடைய களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. யூபி அணியின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறடித்து தொடக்க வீரர்களே மிக சிறப்பாக விளையாடி டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இதனால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மெக் லானிங் 43 பந்துகளில் 51 ரன்களும், ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 64* ரன்களும் எடுத்து அசத்தினார்.
Read More :- காயத்தால் தடுமாறும் சென்னை வீரர்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..!
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி WPL 2024 தொடரின் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலிலும் டெல்லி அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. யூபி அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.
ஆட்ட நாயகன் (M.O.M) – மரிசான் கேப் (டெல்லி கேபிட்டல்ஸ்)