WPL 2024 : கேப்டன் ஸ்மிருதியின் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி ..! தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு ..!
WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது.
Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு
மேலும், ஸ்மிருதியுடன் இணைந்து எல்லிஸ் பெர்ரியும் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். இதனால் இறுதியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியின் கேப்டனான ஸ்மிருதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். எல்லிஸ் பெர்ரி 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து, இமாலய இலக்கான 199-ஐ சேஸ் செய்வதற்கு களமிறங்கியது யூபி அணி. யூபி அணியின் தொடக்க வீரரான அலிசா ஹீலி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் மட்டும் சிறுது நேரம் நின்று விளையாடி இருந்தால். யூபி அணி எளிதில் இந்த போட்டியை வென்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சரியான தருணத்தில் அவரது விக்கெட்டை பெங்களூரு அணியின் மோலினக்ஸ் வீழ்த்தினார்.
Read More – IPL 2024 : அச்சச்சோ ..சென்னை அணிக்கு முதல் அடி ? ஐபிஎல்லிருந்து வெளியேறினார் கான்வே..!
இதனால், 38 பந்துகளில் 55 ரங்களில் இருந்த போது அலிசா ஹீலி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரை தாண்டி யூபி அணியில் யாரும் சரியாக விளையாடாததால் யூபி அணி தோல்வியை தழுவியது. இறுதியில் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.