WPL 2024 : குஜராத்தை பந்தாடி பெங்களூரு அணி அபார வெற்றி ..!
WPL 2024 : பெண்களுக்கான WPL தொடரின் 5-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய குஜராத் அணி பெங்களூரு அணியின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத்தடுமாறியது. குஜராத் அணியின் ஹர்லீன் தியோல் மட்டும் சற்று நிதானகமாக நின்று விளையாடி கொண்டிருந்தார்.
Read More : – நீங்க கொஞ்சம் விஸ்வாசமா இருங்க ..கேப்டன் ரோஹித் சொல்வது சரிதான் – சுனில் காவஸ்கர்
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். பின், ஹர்லீன் தியோல் 31 பந்துகளில் 21 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். அதனை அடுத்து குஜராத் அணியின் ஹேமலதா அந்த அணிக்கு சற்று நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடினார். அவரது ஆட்டத்தால் அந்த அணி பெரும் வீழ்ச்சியிலிருந்து விடுபட்டது.
இறுதியில், குஜராத் அணி 20 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியில் ரேணுகா சிங் சிறப்பாக பந்து வீசி 4 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை எடுத்து வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதை அடுத்து எளிய இலக்கை எடுப்பதற்கு பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி, குஜராத் அணியின் பந்து வீச்சை சிதறடித்தது.
Read More : – #WPL 2024 : 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி ..!
இறுதியில், பெங்களூரு அணி 12.3 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் முன்னேறி உள்ளது.
ஆட்ட நாயகன் (M.O.M) – ரேணுகா சிங் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)