ஆஹா … இது உண்மையா இருந்த வேற லெவல் ..! ரிஷப் பண்ட்டுக்கு அடித்த லக் ..!
ரிஷப் பண்ட் : இந்திய அணியில் எப்போதுமே 4-வது அல்லது 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் களமிறங்கி கலக்கி வந்தார். நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அந்த இடத்திலும் களமிறங்கி அவர் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 14 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளை மட்டுமே வெற்றி பெற்று ஃபிளே ஆப் சுற்றில் கூட தகுதி பெறவில்லை. இதன் விளைவாக 17 வருடங்கள் டெல்லி அணி பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்கை அந்த பதிவியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டையும் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் அந்த அணி விடுவிக்க உள்ளதாக தகவல் தெரிகிறது.
ஒருவேளை ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டால் ரிஷப் பண்டை சென்னை அணி ஏலத்தில் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டெல்லி அணியோ அல்லது ரிஷப் பண்டோ தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த தகவல் வெளியானது முதல் சென்னை அணியின் ரசிகர்களும், ரிஷப் பண்ட்டின் ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும், பண்டுக்கு அடித்த லக் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், ரிஷப் பண்ட் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அடுத்த விக்கெட் கீப்பராக விளையாடுவர் என்பதில் சந்தேகமில்லை. அதே போல ‘தல’ தோனியும் இம்பாக்ட் வீரராக களமிறங்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அடுத்த கேப்டன் ருதுராஜ் தொடருவாரா இல்லை ரிஷப் பண்ட் புதிதாக செயல்படுவாரா என்பதெல்லாம் மெகா ஏலம் வந்தாலே தெரியவரும்.