அடடா…புதிய லம்போர்கினி காரை வாங்கிய சச்சின்…விலை எவ்வளவு தெரியுமா..?

Sachin Tendulkar new car

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் லம்போர்கினி ( Lamborghini Urus S ) கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சொந்தமாக வாங்கிய  முதல் லம்போர்கினி கார் இதுவாகும். இதனுடைய விலை 4 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

sachin tendulkar Lamborghini Urus S
sachin tendulkar Lamborghini Urus S [Image source: file image ]

லம்போர்கினி நிறுவனம்  Urus S மாடலை இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம்  செய்துள்ளது. இது 4.18 கோடி ரூபாய் விலையில் வருகிறது,இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே பல பிரபலங்கள் இந்த கார்களை வாங்கி வருகிறார்கள்.

sachin tendulkar Lamborghini Urus S
sachin tendulkar Lamborghini Urus S [Image source: file image ]

அந்த வகையில், தற்போது சச்சின் டெண்டுல்கரும் Lamborghini Urus S காரை வாங்கியுள்ளார்.  இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களான Porsche 911 Turbo S, Porsche Cayenne Turbo, BMW i8 உள்ளிட்ட பல கார்களை வாங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் பலவிதமான உயர்தர கார்களை வைத்திருந்தாலும், இப்போது அவர் வாங்கிய முதல் லம்போர்கினி கார் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்