WorldCup2023: இரண்டாவது லீக் போட்டி.! டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு.!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரவாரத்துடன் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த 282 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய கான்வே 152* ரன்களும், ரச்சின் ரவீந்திரன் 123* ரன்களும் அடித்தனர்.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில், நெதர்லாந்தை அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அந்த 6 போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்றைய உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து, முடிந்த வரை கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. உலகக்கோப்பையில் இரண்டாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
நெதர்லாந்து (பிளேயிங் லெவன்):
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), பாஸ் டி லீடே, தேஜா நிடமானுரு, சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):
இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசம்(C), முகமது ரிஸ்வான்(W), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்