இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியின் மூலம் நெதர்லாந்தின் பாஸ் டி லீடே உலகக்கோப்பையில் விளையாடும் ஏழாவது தந்தை-மகன் ஜோடி ஆனார்கள். உலகக்கோப்பையில் விளையாடும் பாஸ் டி லீடின் தந்தை டிம் டி லீடேயும் நெதர்லாந்துக்காக விளையாடியுள்ளார்.
டிம் டி லீட் நெதர்லாந்துக்காக மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1996 மற்றும் 2007 க்கு இடையில் நெதர்லாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அதேசமயம் பாஸ் டி லீடே தனது சர்வதேச வாழ்க்கையில் இதுவரை 30 ஒருநாள் மற்றும் 31 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த ஜூன் 2018-ஆம் ஆண்டில் தனது சர்வதேச போட்டியில் அறிமுகமானார். பாஸ் டி லீடே நெதர்லாந்து அணியில் ஆல்ரவுண்டராக விளையாடுகிறார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் அறிமுகமானார்.
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது இன்றை முதல் போட்டியில் 50 ஓவர்களை முழுமையாக விளையாடவில்லை 49 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இன்றைய போட்டியில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 4 விக்கெட்டை பாஸ் டி லீடே வீழ்த்தியதின் மூலம் தனது தந்தை பாகிஸ்தானிடம் அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கி உள்ளார்.
கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டிம் டி லீடே 19 பந்துகளை சந்தித்தும் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இன்றைய போட்டியில் அவரது மகன் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தந்தையின் அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கி உள்ளார்.
இதுவரை உலகக் கோப்பையில் விளையாடிய தந்தை-மகன் ஜோடிகள்:
உலகக்கோப்பையில் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்காக டான் பிரிங்கிள் விளையாடினார். அவரது மகன் டெரெக் பிரிங்கிள் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக விளையாடினார். தந்தை லான்ஸ் கெய்ர்ன்ஸ் மற்றும் மகன் கிறிஸ் கெய்ர்ன்ஸ் நியூசிலாந்துக்காகவும், தந்தை கிறிஸ் பிராட் மற்றும் மகன் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்துக்காகவும், தந்தை ஜெஃப் மார்ஷ் மற்றும் மகன்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஷான் மார்ஷ் ஆஸ்திரேலியாவுக்காகவும், தந்தை ராட் லாதம் மற்றும் மகன் டாம் லாதம் ஆகியோர் நியூசிலாந்துக்காக விளையாடினர். தந்தை கெவின் குரான் ஜிம்பாப்வேக்காகவும், மகன் சாம் குர்ரன் இங்கிலாந்துக்காகவும், டிம் டி லீட் மற்றும் பாஸ் டி லீட் ஜோடி நெதர்லாந்துக்காகவும் விளையாடினர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…