ஐசிசியின் நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, 19 லீக் போட்டியில் நெதர்லாந்து vs இலங்கை அணிகள் மோதி வருகிறது. லக்னோவில் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டி காலை 10.30 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், மூன்றாவது போட்டியில், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இதுபோன்று, குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும், பந்து வீச்சில் சொதப்புவதால் அவர்களால் வெற்றியை பெற முடியாமல் போகிறது. இதனால், இப்போட்டியில் யார் வெல்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இதுபோன்று, இன்றைய நாளில் 20வது போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் 2 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடமும் தோற்றது.
இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது. இன்று தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதுபோன்று, மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பாக, கடைசியாக நெதர்லாந்திற்கு எதிரான தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
இதனால், தென்னாபிரிக்கா அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. எனவே, இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளதால், இன்று நடைபெறும் போட்டி அனல்பறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இரு அணிகளும் இதுவரை 69 ஒருநாள் ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா 33, இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இதில், 5 ஆட்டங்களில் முடிவு எட்டப்படாத நிலையில், ஒரு போட்டி டை ஆகியுள்ளது. தற்போது உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்கா அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 2 புள்ளிகளும் இங்கிலாந்து அணி 6வது இடத்திலும் உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியில் பேட்டிங், பவுலிங் என ஆல் ரவுண்டில் பலம் வாய்ந்து இருந்தும், முழுமையாக இதுவரை செயல்படவில்லை, நம்பிக்கை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸும் காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். இதனால் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…