WorldCup2023: டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சுத் தேர்வு.!

Bangladesh vs Afghanistan

2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது அக்டோபர் 5ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியானது நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் இரண்டு லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

முதலாவதாக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது.

பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஷாகில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பாகிஸ்தான் 286 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 7) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும், ஆப்கானிஸ்தான்  அணியும் மோதுகிறது. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 15 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் பங்களாதேஷ் அணியே அதிகம் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பங்களாதேஷ் அணி 9 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளுக்கும் கடுமையான மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ் (w), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக் ஃபரூக்ஹல்ஹாக்,

பங்களாதேஷ்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன்(c), முஷ்பிகுர் ரஹீம் (wk), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk