மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், உட்பட 10 நாடுகளின் அணி பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் தற்போது வரை மூன்று லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதன்படி, முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி வீழ்த்தியது. நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது. இதனையடுத்து மூன்றாவது போட்டியானது இன்று (அக்-7ம் தேதி) தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் மற்ற வீரர்கள், பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 37.2 ஓவர்களிலேயே முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கி விளயாடியது. அதன்படி, தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக முதலில் களமிறங்கினர். ஒருபுறம் தன்சித் பொறுமையாக விளையாட, மறுபுறம் தாஸ் 5 ரன்களுடன் ரன் அவுட் ஆனார்.
பிறகு களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் நிதானமாக விளையாடி அரைசதம் எட்ட லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மிராஸ் 73 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேற, நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கி பேட்டை சுழற்றி அரைசதம் அடித்து விளாசினார். தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழக்க, சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் இறுதிவரை விளையாடி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தனர்.
முடிவில், பங்களாதேஷ் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் விதியத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக ஹசன் மிராஸ் 57 ரன்களும், ஹொசைன் சாண்டோ 59* ரன்களும் எடுத்துள்ளனர். போட்டியின் சிறந்த வீரராக மெஹிதி ஹசன் மிராஸ் தேர்வு செய்யபட்டுள்ளார். மேலும், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது என்ற நிலையில், இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…