WorldCup2023: இந்திய லெவன்ஸ் அணியில் மாற்றம்..இவருக்கு பதில் இவரா.?

Suriyakumar - Ashwin

WorldCup2023: உலக கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளி விவரப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் உலககோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் அணியாக நுழைந்தது.

பிறகு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இதைத்தொடர்ந்து உலக கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியானது நாளை (15ம் தேதி) நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக, மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை இந்திய அணியிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்க பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தொடரில் நடந்த 9 லீக் போட்டிகளில், அக்டோபர் 8 அன்று சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இந்தியாவுக்கான தொடக்க ஆட்டத்தில் மட்டுமே ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதன்பிறகு அணியில் 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். இப்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற உள்ளதால் 6 பந்துவீச்சாளுடன் இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யகுமார் யாதவும் இந்த தொடரில் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தும், சூர்யகுமார் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல. முதலாவதாக நடந்த ஆரம்ப போட்டியில் கூட அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவலில் இருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் துணை கேப்டனும், ஆல்-ரவுண்டரும் ஆன ஹர்திக் பாண்டியாவும் தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டதோடு, துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிக்கப்பட்ட இந்திய அணி

ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (W), ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ்/ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1