வெறி தனமான ஆட்டத்தால் நியூசிலாந்திற்கு இமாலாய இலக்கை நிர்ணாயித்த வெஸ்ட் இண்டீஸ்..!

Default Image

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை  எதிர்கொண்டு வெற்றி பெற்றது.இந்நிலையில் தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியானது பிரிஸ்டோலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது.அந்த அணியின் தொடரக்க வீரர்களாக களமிறங்கிய கெயில்( 39) ரன்னிலும் , லிவிஸ்(50) அரை சத்த

மடித்து இந்த ஜோடி ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவே 86 பந்துகளில் சதமடித்து 101 ரன்கள்  எடுத்து ஆட்டமிழக்கவே அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 47 ரன்னும் ,அதிரடிக்கு சொந்தக்காரர் அந்த்ரே ரஸல் 25 பந்துகளை எதிர்கொண்டு  54 ரன்களை விளாசவே 49.2 ஓவரில் அந்த அணி  421 ரன்களை குவித்து ஆல்அவுட் ஆனது.இதனால் நியூசிலாந்து அணிக்கு 422 என்ற இமாலாய இலக்கை நிர்ணயித்துள்ளது. தொடக்கவீரர்களின் சீரான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்