சூடு பிடித்த உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை அமோகம்..!
உலகக்கோப்பை திருவிழா நெருங்கி வரும் நிலையில் அணிகள் எல்லாம் இங்கிலாந்தில் முகாம் இட்டு உள்ளது.இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.இந்த அணிகளுக்கு எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டம் துவங்கி உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டி மே 30 தேதி தொடங்கி ஜுன் 14 வரை நடைபெறுகிறது.இதில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும்.
மேலும் உலகக்கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.அரை இறுதி மற்றும் இறுதிபோட்டியுடன் சேர்த்து மொத்தம் 48 போட்டிகளாக நடைபெறுகிறது.
இதற்கான டிக்கெட்டுகளை எல்லாம் ஐசிசி விற்று வருகிறது.மேலும் ரசிகர்கள் எளிமையான வகையில் டிக்கெட்டுகளை பெற ஏற்பாடு செய்துள்ளது.தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று உள்ளதாக ஐசிசி உலககோப்பை தொடருக்கான இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதில் 1 லட்சத்தி பத்தாயிரம் டிக்கெட்டுகளை ரசிகைகள் வாங்கியுள்ளனர்.மேலும் 16 வயதுக்குட்பட்டோர் 1 லட்சம் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.