உலகக்கோப்பை கிரிக்கெட் “ஸ்டன்ட் பை ” பாடல் வெளியீடு ஆட்டம் ஆரம்பம்
ஐபில் சூறாவளி கடந்து வேகத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் வருகிற 30 ம் தேதி தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை இங்கிலாந்தில் வைத்து நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன ,நடப்பு சாம்பியன் பட்டத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது கோப்பையை வெல்ல கோலி தலைமையிலான இளம் படை தயாராகி வருகிறது.இந்த உலகக்கோப்பைக்கான பாடல் வெளியிடப்பட்டுள்ளது.“ஸ்டன்ட் பை “இப்பாடலை பிரபல பாப் பாடகரான லோரின் மற்றும் ருடிமென்டல் குழு தயாரித்து வெளியிட்டுள்ளது.இப்பாடல் வெளியான சிலமணி நேரங்களில் வைரலாகி இணையதளங்களில் ஹிட்டாகி பட்டையை கிளப்பி வருகிறது .