உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை..!

Default Image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி பகல் 3 மணிக்கு மோதவுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போது வரை ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி உலக கோப்பையை நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால், 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை 9 அணிகள் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடினர். இதில் 3 தொடர் வெளிநாட்டில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழக்கப்பட்டது.

2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 60 புள்ளிகளும், 3 போட்டி கொண்ட தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகளும், 4 போட்டிகள் என்றால் வெற்றி பெறும் அணிக்கு 30 புள்ளிகளும் வழங்கப்படும். போட்டி டிரா ஆனால் வெற்றி புள்ளியில் 3-ல் ஒரு பங்கு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பல போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனால் போட்டிகள் தள்ளிவைக்க வைக்கப்பட்டது. சில டெஸ்ட் தொடர்கள் ரத்தும் செய்யப்பட்டது. இதனால், ஐ.சி.சி வெற்றிக்கு வழங்கப்படும் புள்ளிகளுக்கு பதில் சதவீதம் அடிப்படையில் வழங்கியது. இதன், காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இந்திய கட்டாயம் வெற்றி பெற வேண்டம் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து உடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. பின்னர், இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை பெற்றது. இந்திய அணி 5 தொடர்களில் வெற்றி, நியூசிலாந்து அணியுடன் விளையாடிய தொடரில் தோல்வியையும் தழுவி 72.2  சதவீதத்துடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

நியூசிலாந்து அணி 5 தொடரில் விளையாடி 3-ல் வெற்றியும் ஒரு தொடரில் டிராவும், ஒரு தொடரில் தோல்வியையும் தழுவி 70 சதவீதத்துடன் 2-வது இடத்திற்கு முன்னேறியது.  ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி இதுவரை 1983-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2002-ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இலங்கை அணியுடன் பகிந்து கொண்டது. பின்னர், 2007-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என 5 கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஆனால், விராட் கோலி கேப்டன் பதவியேற்ற பிறகு இந்திய அணி ஐ.சி.சி நடத்திய எந்த கோப்பையையும் வென்றதில்லை. கோலி தலைமையில் இந்திய அணி 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதிப்போட்டியிலும், 2019-ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அரைஇறுதியிலும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று இந்திய நேரப்படி பகல் 3 மணிக்கு மோதவுள்ளது.

இந்தியா அணி:

ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

நியூசிலாந்து அணி:

டிவான் கான்வே, டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்