உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : கையில் கருப்பு பட்டை அணிந்து முதலில் இறங்கிய இந்திய அணி..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனால், உள்ளூர் நேரப்படி நாளை காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும் என ஐசிசி அறிவித்தது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கி உள்ளனர். இந்திய அணி 3 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்கமால் 8 ரன்கள் எடுத்துள்ளனர்.
ரோஹித் 7, சுப்மான் கில் ரன் எடுக்காமல் விளையாடி வருகின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி:
டிவான் கான்வே, டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
#TeamIndia is wearing black armbands in remembrance of Milkha Singhji, who passed away due to COVID-19. ????#WTC21
— BCCI (@BCCI) June 19, 2021