உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 34 ரன்னில் 3 விக்கெட்டை பறித்த இந்திய அணி..!
5-வது நாள் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றை 5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது 101 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வருவதற்குள் 34 ரன்னில் 3 விக்கெட்டை பறி கொடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 135 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்தது.